தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, தொடர் கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. வைகை அணையில் முழு கொள்ளளவான 71 அடிக்கும் தண்ணீர் நிரம்பியது. தற்பொழுது, வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 3100 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து தற்போது 68.50 அடியாக இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை மூலமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தங்களின் குடிநீர் தேவையையும், பாசனத்தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியாகும். தற்போது இந்த அணையில் 68.50 அடி நீர் வரத்து இருப்பதால் […]
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வைகை பூர்வீக பாசனத்திற்காக வைகை அணை இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 184 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற உள்ளன. இதன்மூலம், இரண்டாம் போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி 40 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்து சிறப்பு தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த மணல் கொள்ளையின் பின்னணி என்ன..?? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தேனி: முதல்போக பாசன வசதிக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து 1060 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் என இன்முகத்துடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாய பெருங்குடி மக்கள்.