வடோதராவில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை குஜராத்தின், வடோதரா மாவட்டத்தில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,விபத்தில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்தில் ஐந்து பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வடோதராவில் […]