வடபழனியில் இன்று அதிகாலை சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்று இருந்த போது அந்த வழியாக வந்த சென்னை மாநகர பேருந்தின் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி பணிமனையில் இருந்து 159ஏ என்ற சென்னை மாநகர் பேருந்து புறப்பட்டு சென்றது. பணிமனையில் இருந்து புறப்பட்டதால் பயணிகள் யாரும் பேருந்தில் இல்லை. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. வடபழனி அருகேயும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. […]
சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இன்று முதல் பக்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 108 சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மட்டுமே கும்பாபிஷேகம் விழாவில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காண்பதற்காக வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், வடபழனி முருகன் கோயிலில் இன்று […]
சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியை விற்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட 3 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நட்சத்திர விடுதியை பார்வையிடுவது போல், சுற்றிக்காட்டிய மூவரும் 165 கோடி ரூபாய்க்கு விடுதியை பேரம் பேசியுள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள பிரபல அம்பிகா எம்பயர் என்ற நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றை விற்க போவதாக கூறி மூன்று பேர், கேரள கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளனர். இதனையடுத்து அந்த நிறுவன மேலாளர், விற்பதாக கூறப்படும் நட்சத்திர விடுதியை பார்வையிட வந்துள்ளார். பின்னர் அவரை […]