தடுப்பூசி கொள்முதல் விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவும் நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக,தடுப்பூசி போடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.ஆனால்,தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன்காரணமாக,தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வரவில்லை என்றும் […]