கேரளா மாநிலத்தில் உள்ள திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1923 -ம் ஆண்டு நவம்பர் 30-ம் நாள் ஜானகி பிறந்தார்.இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார். வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழக முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார். […]