கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு இடங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், […]