உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் , தனியார் மீட்புப்படை அமைப்புகள், சர்வதேச மீட்புப்படையினர் என பல்வேறு அமைப்புகள் இரவு பகலாக கடந்த 17 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் தொடர் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயந்திரங்கள் தொடர்ச்சியாக பழுதடைந்த காரணத்தால், இறுதியில் மனிதர்கள் மூலம் துளையிடும் பணியில் நல்ல பலன் கிடைத்த்து. […]
உத்தரகண்ட் , உத்தர்காசியில் சில்கியாரா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 17வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீட்பு பணிகள் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட தொடர் கோளாறு காரணமாக, கைகளால் துளையிடும் “எலி துளையிடும் முறை” பின்பற்றப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி […]