குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு நொய்டாவில் நவம்பர் 2 வரை, ட்ரோன் கேமராக்களை பறக்க தடை விதித்துள்ளது. நவ-1 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள கவுதம புத்தநகரில் நடைபெறவுள்ள ஏழாவது “இந்தியா தண்ணீர் வாரம்” நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வருகை தரவுள்ள இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பாதுகாப்பு கருதி நொய்டாவில் ட்ரோன் கேமராக்களை பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர். தடையை மீறி செயல்பட்டால் இ.பி.கோ பிரிவு […]
உத்தரபிரதேசத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 22,439 பேருக்கு புதிய கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்ட்டுள்ளது.நேற்று மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்ததிலிருந்து அம் மாநிலத்தி ஒரே நாளில் பதிவான எண்ணிக்கையில் உச்சகட்டமாகும். தற்போது மாநிலத்தில் 1,29,848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதார) அமித் மோகன் பிரசாத் தெரிவித்தார். இதுவரை, உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 1,00,51,328 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று பிரசாத் மேலும் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் ,8 போலீசார் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய கான்பூர் என்கவுன்டர் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடி கும்பலுடன் தொடர்புடைய, மேலும் 3 போலீசார் அதிரடியாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு […]