இந்தியா அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல மேலும் ஒருங்கிணைந்து பாடுபட தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி வாயிலாக று உரையாடினார்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,அதிபர் பைடனின் பதவிக்காலத்திற்கு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், இந்திய-அமெரிக்க உத்திசார் கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்கு, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். பிராந்திய அளவிலான வளர்ச்சிகளையும், புவியியல்-அரசியல் ரீதியான விஷயங்களையும் […]