ரயில்களில் இரும்பு சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதால் சில வேளைகளில் தண்டவாளத்துடன் போதிய பிடிப்பு கிடைக்காமல் சக்கரங்கள் வழுக்குவது அவ்வப்போது நிகழும் விஷயம்.இதனால் சில விபத்துகளும் நிகழ்கிறது. அதிக பாரம் கொண்ட பெட்டிகளை இழுக்கும்போதும், மேடான பகுதியை நோக்கி செல்லும்போதும் ரயில் எஞ்சின் சக்கரங்களுக்கும், தண்டவாளங்களுக்குமான பிடிப்புத்தன்மை இழந்து சக்கரங்கள் வழுக்கியபடியே இருக்கும். காய்ந்த மரைத் தழைகள், இலைகள் தண்டவாளங்களில் உதிர்ந்து, சக்கரங்களை வழுக்கச் செய்யும். தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கும்போது, மழை நேரத்திலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதனால், […]