குழந்தை அருகில் தாய் பீர் அருந்தி படுத்திருப்பது குற்றமல்ல. இந்த மரணம் அஜாக்கிரதையாக நடைபெற்றதே என கூறி மூரியல் மாரிசன் என்கிற பெண்மணியின் 20 ஆண்டுகால சிறை தண்டனையை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம். அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மூரியல் மாரிசன் என்கிற பெண்மணி தனது 4 மாத குழந்தையுடன் தன் வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் பீர் குடித்துவிட்டு குழந்தை அருகிலேயே படுத்துறங்கியுள்ளார். அவர் காலையில் கண்விழித்து பார்க்கையில் குழந்தை […]
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி, இருமல், தும்மலிலிருந்து கொரோனா வைரஸ் காற்றில் பரவி அருகில் இருப்பவர்களின் நாசி துவாரம் வழியாக எளிதில் மனிதர்களின் மூச்சுக்குழலில் ஆழமாக சென்றுவிடுகிறது. என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனை பற்றி நோபல் பரிசு பெற்ற மரியோ ஜே.மோலினா உள்ளிட்ட விஞ்ஞானிகள் அடங்கிய குழு மூன்று குழுக்களாக வுகான் நகர் சீனா, வாஷிங்க்டன் நகரம் அமெரிக்கா, இத்தாலி ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். காற்றில் […]
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருக்கும் ஆதலால், சில மாதங்களுக்கு அவர்களை கொரோனா தாக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்து வீடு திரும்பியவரை மீண்டும் கொரோனா தாக்குமா என்கிற சந்தேகம் பொதுமக்கள் மனதில் எழுந்தவண்ணம் இருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை பெரும்பாலும் கொரோனா மீண்டும் தாக்க வாய்ப்பில்லை எனவும், ஆனால், அதற்குறிய அதிகாரபூர்வ அறிக்கைகள் […]
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஹைன்ஸ் என்பவர் கொரோனா காலத்தில் தத்தளிக்கும் சிறு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கடன் தொகையை முறைகேடாக பெற்று அதனை கொண்டு ஒரு புதிய லம்போகினி காரை வாங்கியுள்ளார். கொரோனா காலத்தில் சிறு நிறுவனங்களை காக்கும் நோக்கில் கடன் வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியது. Paycheck Protection Program என்கிற பெயரில் இந்த கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை பெற டேவிட் ஹைன்ஸ் வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். 3 […]
டிக் டாக் பிரபலங்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவை பகுதியில் வீடியோ பதிவிட அழைப்பு விடுக்கப்படவுள்ளதாம். மேலும், பிரத்யோகமாக வீடியோ வழங்கும் படைப்பாளிகளுக்கு நிதி உதவி அளிக்கவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு அச்சறுத்தலாகவும் செயல்படுவதாக கூறி டிக் டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது இதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து […]
அமெரிக்காவில், முல்ட்னோமா கவுண்டி நீதி மையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது, லேசர் ஒளி கண்ணில் பட்டதில் 3 பெடரல் அதிகாரிகள் கண்பார்வையை இழந்தனர். அமெரிக்காவின் உள்ள போர்ட்லேண்ட் மாகாணத்தில் உள்ள முல்ட்னோமா கவுண்டி நீதி மையம் அருகே 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். கடந்த திங்களன்று இதனை தடுக்க பெடரல் அதிகாரிகள், முயன்றனர். அப்போது, கலகக்காரர்கள் தாக்கியதில் ஒரு பெடரல் அதிகாரி பலத்த காயமுற்றார். ஒரு அதிகாரி துப்பாக்கி சூட்டில் இறந்துவிட்டர். மேலும், 3 […]
அமெரிக்க போர்க்கப்பலுக்கே சவால் விடும் வகையில் சீனா 075 வகை போர்கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 1990-களில் இருந்தே சீனா தனது ராணுவ படைகளை பலப்படுத்தி வருகிறது. தற்போது அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில், அமெரிக்காவிற்கு இணையாக சீனா தனது கடற்படையை தாயார்படுத்தி வருகிறது. சீனா, அண்மையில் தனது கடற்படைக்கு பலம் சேர்க்கும் வகையில், இரண்டு வகையான 075 வகை போர்க்கப்பல்களை அறிமுகப்படுத்தியது. முதல் வகை, கடந்த வருடம் அக்டோபரிலும், இரண்டாம் வகை ஏப்ரல் மாதமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை […]
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 98.2 சதவீதம் மதிப்பெண் பெற்றதால் ஐவி லீக் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது கொண்ட விவசாயி ஒருவரின் மகன் வெளியாகிய 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் 98.2 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார். எனவே இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஐவி.லீக் பல்கலைக்கழகத்தின் முழு உதவித்தொகை பெற கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார். […]
குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் பழனிசாமிக்கு பால் ஹாரிஸ் ஃபெல்லோ (Paul Harris Fellow) எனும் விருதினை அமெரிக்காவை சேர்ந்த ரோட்டரி அமைப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் செயல்பட்டு வருகிறது ரோட்டரி அமைப்பானது, உலகில் பல்வேறு பகுதிகளில் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுவர்களுக்கு கவுரவ விருது அளித்து பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கவுரவ […]
அமெரிக்க பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அன்றைய நாளில் டிவிட்டர் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளித்துள்ளது. உலக புகழ் பெற்ற சமூக வலைதள நிறுவனமாக விளங்குகிறது டிவிட்டர் இந்த நிறுவனம் தற்போது தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி, அன்றைய நாளில் டிவிட்டர் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அன்றைய நாளில் சைபர் செக்கியூரிட்டி ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தின் பாதுகாப்புக்காக வேலை செய்வார்கள் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில், ஆளும் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக யார் நிற்க உள்ளார் என போட்டி நிலவியது. அதில், ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பிடன் மற்றும் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. […]
அமெரிக்க அதிபர் டிரம்புடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்தாலோசித்துள்ளளார். இந்த தகவலை தற்போது பிரதமர் மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு நாட்டு தலைவர்களும், பிற நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, தான் நண்பர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் தொலைபேசியில் பேசியதாக தனது டிவிட்டர் பக்கத்தில் […]
இணையம் வாயிலாக மற்றநாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஓநாய் படைகளை சீன அரசு களமிறக்கியுள்ளதாம். அமெரிக்கா போன்ற சீனாவை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நாடுகளை சமாளிக்கவே இந்த ஓநாய் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா விவகாரத்திற்கு முன்னர் இருந்தே சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலும்,மற்ற வகைகளிலும் பிரச்சனை இருந்து வந்தன. தற்போது கொரோனா பரவல் தொடர்பாக சீனா , அமெரிக்கா நாட்டை மட்டுமின்ற மற்ற சில நாடுகளையும் பகைத்து வருகிறது. தற்போது சீனா, இந்தியாவின் லடாக் […]
‘இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை.’ – சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஷாவோ லெஜியன். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் சில நாட்களாக எல்லை பிரச்சனை எழுந்து வந்தவண்ணம் இருக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் ராணுவ வீரர்கள் குவிந்துள்ளதால் இந்தியா- சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாட்டிற்குமான இந்த பதட்டமான சூழலை தவிர்க்க அமெரிக்காவானது இந்தியா – சீனா இடையே மத்தியஸ்தம் செய்து பிரச்னையை தீர்த்துவைக்கும் […]
டிவிட்டர் நிறுவன செயல்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பானவர் நான்தான். எங்கள் ஊழியர்களை விட்டுவிடுங்கள். – டிவிட்டர் சி.இ.ஓ அதிகாரி தகவல். அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தபால் ஒட்டுகளுக்கான விண்ணப்பங்களைய அனுப்பும் பணியில் கலிபோர்னியா மாகாண ஆளுநர் தொடங்கினார். இந்த தபால் வாக்குசீட்டுகள் மூலம் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார். இதனை மறுத்து ட்ரம்பின் பதிவு பொய்யானது என ஆதாரத்துடன் செய்தியாக அமெரிக்க பத்திரிக்கை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. பத்திரிக்கை செய்தியை மேற்கோள் […]
அமெரிக்காவில் இதுவரையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 1,00,021 ஆக அதிகரித்துள்ள்ளது. உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், பல நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் உலகம் முழுக்க 56,37,367 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 3,49,290 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில், அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அங்கு இதுவரையில், 17,13,000 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 1,00,021 ஆக அதிகரித்துள்ள்ளது. […]
அமெரிக்காவானது ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதியின் படி, அந்நாடு பொருளாதார தடை விதித்துள்ள ஒரு நாட்டுடன் இன்னொரு நாடு பொருட்கள் வாங்கி வந்தால், பொருள் வாங்கிய நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கும். இந்தியாவானது, ரஸ்யாவிடம் இருந்து எஸ்.400 என்கிற 5 வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டே ஒப்பந்தம் போட்டது. அதன்படி, முதற்கட்ட தொகையாக இந்திய மதிப்பில் ரூபாய் 6000 கோடியை சென்ற ஆண்டு இந்தியா ரஸ்யாவிடம் […]
அமெரிக்காவில் மூஸ் என்கிற நாய்க்கு கால்நடை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா கால்நடை மருத்துவ தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவ மாணவர்களுக்கு கவுன்சில் வழங்கி வந்த மூஸ் என்கிற 8 வயதுள்ள நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ள்ளது. கால்பந்து போட்டிகள், கிளப் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இந்த மூஸ் நாய் கலந்துகொள்ளும். முக்கியமாக மன அழுத்தத்தில் இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலில் இந்த […]
சீனா அரசிற்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதில்லை என 30 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உலக சுகாதார அமைப்பிற்கு தரப்படும் நிதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதன் உறுப்பினர் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என ட்ரம்ப் சுகாதார அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். உலக சுகாதார அமைப்பு (WHO -World Health Organisation) கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அமெரிக்காவிடம் இருந்து செல்லும் நிதியை ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு […]
சீனாவின் வூகாண் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலக அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகளை அதிகம் சந்தித்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. அந்நாட்டில் மட்டும் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றின் கரணமாக பலியாகி உள்ளனர். மேலும், 13.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தவைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டு திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து […]