இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற நோவாக் ஜோகோவிச் தீவிரம். நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். […]