வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகளை போல கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவையும் டிரம்ப் நேற்று (மார்ச் 25) பிறப்பித்தார். அமெரிக்காவில் வாக்குபதிவு நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் பொதுத் தேர்தல்கள் என்பது இந்தியாவை போல நாடு முழுவதும் ஒரே தேர்தல் விதிகள் என்றில்லாமல், மாநில அரசுகளால் […]