நான் ராஜினாமா செய்யவில்லை.. செய்ய விரும்பவில்லை- ஜெஃப்ரி பெர்மன்!
நான் ராஜினாமா செய்யவில்லை, எனவும், ராஜினாமா செய்ய விரும்பவும் இல்லை என நியூயார்க் நகரின் பிரபல வழக்கறிஞர் ஜெஃப்ரி பெர்மன் தெரிவித்தார். நியூயார்க் நகரின் பிரபல வழக்கறிஞரான ஜெஃப்ரி பெர்மன், தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்த தகவல்கள் பொய் எனவும், நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்காக அமெரிக்கா நீதிமன்றத்தின் நீதிபதிகளால் நான் நியமிக்கப்பட்ட எனது பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை, எனவும், ராஜினாமா செய்ய விரும்பவும் இல்லை என ஜெஃப்ரி பெர்மன் தெரிவித்தார்.