ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக […]