நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.இதனால்,அனைத்து பகுதிகளிலும் இன்று மனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. […]
தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் அமைச்சர் கே.என் நேரு, தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் செப்டம்பர் 15க்குள் விடுபட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இடஒதுக்கீடு போன்றவற்றில் குற்றசாட்டு உள்ளது. […]