சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. மேலும்,திமுக,அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிர […]