இயக்குநர் ராம், பூர்ணா ஆகியோருடன் இணைந்து மிஷ்கின் நடித்து, எழுதி, தயாரிக்கும் படம் ‘சவரக்கத்தி’. இந்தப் படத்தை மிஷ்கினின் உதவி இயக்குநரும் சகோதரருமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரேலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்பொழுது பேசிய மிஷ்கின், ” இந்த படத்தை திரையுலகில் தான் பார்க்கவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.அவரவர் தங்கள் வேலையை நியாயமாகப் பார்ப்போம். இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸில் போட நான் அனுமதி தருகிறேன்” என்று கூறியுள்ளார். https://www.youtube.com/watch?v=yoxjUAI1oX4