உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இறந்த காங்கிரஸ் தலைவர் அசிம் கான் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தால் உயிரிழந்த காங்கிரஸ் தலைவரின் வீட்டு மற்றும் பக்கத்து வீடுகளும் கடைகளும் சேதமடைந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை மற்றும் தீயணைப்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டு, இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் இடிபாடுகளில் இருந்து கண்டறியப்பட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.