லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு அருகே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷின் பாதுகாப்பிற்காக உடன் சென்ற […]
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் […]
ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தினசரி பாதிப்பு மூன்றரை லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் உயிரிழப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் […]
உத்திரப்பிரதேசத்தில் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது குறிப்பிட்ட அளவு மதுபானத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினால், அம்மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும். உத்திரப்பிரதேசத்தில் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது குறிப்பிட்ட அளவு மதுபானத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினால், அம்மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி உத்தரப்பிரதேசத்தில் திருத்தப்பட்ட கலால் வழிகாட்டுதலின்படி, ஒரு நபர் நிர்ணயிக்கப்பட்ட சில்லரை வரம்பு மீறி மதுபானங்களை வாங்கி கொண்டு செல்லவோ அல்லது வைத்திருக்கவோ, […]
சர்வாதிகார போக்கை உ.பி அரசு கைவிட வேண்டும் – ஹட்ராஸ் சம்பவத்துக்காக கண்டனம் தெரிவிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹட்ராஸ் எனும் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து மத்திய அரசையும் உத்திரப்பிரதேச முதல்வரையும் கண்டித்து வரக்கூடிய நிலையில், தற்போது எதிர்க்கட்சியினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செல்லும் பொழுது […]
கான்பூர் பகுதியில் பதுங்கியிருந்த 8 குண்டர் படையினர்களை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள பிக்ரு எனும் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் காட்டு பகுதியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல ரவுடியான விகாஸ் துபாய் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கான்பூரில் உள்ள பிக்ரு கிராமத்தில் ரவுடி பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட இடத்திற்கு, டிஎஸ்பி தேவேந்திரன் உட்பட சிலர் குழுவாக சென்று உள்ளனர். இவர்கள் வருவது முன்பே […]
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் என்னுமிடத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு சாா்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னை தனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்னும் இருவர் கடத்திச்சென்று கற்பழித்துவிட்டதாக சென்ற மார்ச் மாதம் போலீசில் புகார் […]