உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளிலும் சிவசேனா தனது வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா உ.பி.யில் உள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கபோவது பற்றி சிவசேனா இதுவரை கூறவில்லை. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தனது கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு சிவசேனா தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று முன்தினம் லக்னோவில் சிவசேனாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. […]