ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், டிசம்பர் 14-ம் தேதி மகாத்மா காந்தி சிலை திறப்பு. ஐக்கிய நாடு தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை அடுத்த மாதம் டிச.14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தின் வடபகுதியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்படவுள்ளது. காந்தி சிலை திறப்பு விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். சிலை திறப்பில் ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். […]
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பில் அதிக ஆதரவு பெற்று நிறைவேறியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, […]