அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள். அங்கு பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் […]