உன்னாவ் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் […]
உன்னாவ் என்னுமிடத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உன்னாவ் விவகாரம் தொடர்பாக அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டார் உத்திர பிரதேச மாநிலத்தில் உன்னாவ் என்னுமிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது இளம் பெண் புகார் அளித்தார்.பின்னர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.பலத்த தீ காயங்களுடன் சிகிச்சைபெற்று வந்த அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை […]
உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குடும்பத்தார் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது .இது தொடர்பாக உன்னாவ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ துணை இயக்குநர் சம்பத் மீனா உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதில் சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் விபத்து வழக்கை முடிக்க 30 நாள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 30 நாள் […]
உன்னாவ் பாலியல் வன்கொடுமை மற்றும் விபத்து வழக்கை உ.பி.யில் இருந்து இடம் மாற்ற உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நண்பகல் 12 மணிக்கு உன்னாவ் வழக்கில் உத்தரவுகளை பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். உன்னாவ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி 12 மணிக்கு நேரில் ஆஜராகி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.