கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருமணமாகாத,கல்வியறிவு இல்லாத, ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் பிறந்த ஆண்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் அதிபர்கள் வரை பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக கொரோனாவால் அதிகளவில் வயதானவர்களே அதிகளவில் உயிரிழப்பதாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருமணமாகாத, குறைந்த வருவாய் கொண்ட, கல்வியறிவு இல்லாத, […]