செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கொரோனா மத்தியில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாது என குஜராத் கல்வி துறை அமைச்சர் பூபேந்திர சிங் சூடாசாமா நேற்று தெரிவித்தார். காந்திநகரில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு […]
இனி இமாச்சலத்திற்குள் நுழைய இப்போது இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நுழையும் மக்களுக்கு இனி ஆன்லைன் பதிவு தேவையில்லை என்று மாநில அரசு நேற்று முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளின் இயக்கம் இடைநிறுத்தப்படும் என்று மாநில அமைச்சர் கூறினார். முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத்தில் பள்ளிகள் […]
மேற்கு வங்கத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து பல இடங்களில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேற்கு வங்கத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சனிக்கிழமைகளில் வங்கி கிளைகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்ந நிலையில் தற்போது அரசு விதித்துள்ள பல்வேறு தளர்வுகளையும், தற்போதைய கொரோனா பாதிப்பு நிலைமையும் கருத்தில் […]
தனிமைப்படுத்துதலில் சில தளர்வுகளை அளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவிவரும் காரணத்தினால், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்து தனிமைப்படுத்தித்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். மேலும் கூறிய அவர், நாளை முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் எனவும், பிற மாவட்டங்களில் […]