தமிழகத்தில் கிரிக்கெட் உட்பட போட்டிகளை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னையில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிகளை காண அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடனான ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளையும் காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கலாம் என […]
கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தான் மெது மெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிறது. அந்தவகையில், அரசு அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், அலுவலகங்களும் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து ரயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனையடுத்து கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 30 புறநகர் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இன்று முதல் கூடுதலாக 12 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள ஹோட்டல்கள், நீதிமன்றங்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநில அரசாங்கம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். சாப்பிடும் பொது தவிர, நேரங்களில் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பார்வையாளர்கள் தங்கள் […]
மத்திய அரசு 5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், பள்ளிகள், பயிற்சி மையங்கள் திறப்பது குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கை பிறப்பித்தது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து , […]
வியாட்னாமில் ஒரு ஹோட்டல் தங்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறை முழுவதும் தங்க முலாம் பூசியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைவாக உள்ள பல்வேறு நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வியட்நாம் நாட்டில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வியட்நாமில் உள்ள ஒரு ஹோட்டல் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டல் தன் வாடிக்கையாளர்களை […]