சென்னை:பல்கலைக்கழக துணை வேந்தர்களை இனி தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், சட்டப்பேரவையில் இன்று கேள்வி – பதில் நேரம் நடைபெற்று வருகிறது. அதன்படி,கேள்வி நேரத்தின்போது,பல்கலைக் கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேரவையில் தெரிவித்திருந்தார். இதற்கு,பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி […]