சென்னை : ஃபெஞ்சல் புயல் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கவுள்ளது. இதனால், வட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றும், அதிகனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, ‘ஃபெஞ்சல்’ புயல் எதிரொலியாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர், மந்தவெளி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. […]