வங்கதேசம்: 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இம்மாதம் தொடக்க முதலே மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் அதிகரிக்க தொடங்கியதால் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த கூடாது என நிறுத்தி வைத்தது. இருந்தும் அரசு முழுதாக இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் போராட்டங்கள் […]
இந்தியாவின் யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை இந்தியாவின் அதிகாரப்பூர்வ யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகிய இரண்டு அரசாங்க டட்விட்டர்கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக ஹேக் செய்யப்பட்டுள்ள அரசு கணக்கு யுஜிசி ட்விட்டர் கணக்கு தான்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரித்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது. அண்ணாமலை பல்.கழகத்திற்கு கடந்த 2014-15 ஆண்டு வரை மட்டுமே தொலைதூர படிப்புகளுக்கான வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யுஜிசி தெரிவித்துள்ளது. அதன்பின்னர்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.இதனால்,அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் […]
நாட்டின் பல பகுதியில் உள்ள அங்கீகாரம் பெறாத 24 சுய சார்பு பல்கலைக்கழகங்கள் போலி என்று பல்கலைக்கழக மானியக்குழு அதிர்ச்சி ரீப்போட் அளித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள அங்கீகாரம் பெறாத 24 சுய சார்பு பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் கூறியதாவது: உத்தரப்பிரதேசத்தில் 8 பல்கலைக்கழங்களும் டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த போலி பல்கலைக் கழகங்களுக்கு […]