சென்னை : ஃபெஞ்சல் புயல் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கவுள்ளது. இதனால், வட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றும், அதிகனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, ‘ஃபெஞ்சல்’ புயல் எதிரொலியாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர், மந்தவெளி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. […]
டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. இந்நிலையில், டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். மேலும், அந்தந்த பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் […]
சீனா, வுஹான் நகரில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா அதிகரித்து வரும் சூழலில், பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தினால் அங்கு சுகாதார பிரச்சனை ஏற்படும் எனவும், இதனால் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. […]