ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.