சூடான் : கிழக்கு சூடானில் அணை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கிழக்கு சூடானில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானது. உடைந்த அணையில் இருந்து வெளியேறிய நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர்என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிவாரண நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூடானின் வடமேற்கு செங்கடல் […]
ஐ.நா கூட்டத்தொடர் : கடந்த 10 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது இந்தியர்கள் மத்தியில் அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் கடந்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் வாயிலாக பரிவர்த்தனை என்பது அசுரவளர்ச்சி அடைந்துள்ளது என்பதை சிறு சிறு கடைகளில் இருக்கும் QR ஸ்கேனர் கூட எடுத்துரைத்து வருகிறது. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் கொண்டு ஏழைகள், ஏழ்மையில் இருந்து முன்னேறி வருவதாக ஐ.நா மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 78வது கூட்டத் தொடர் தலைவர் […]
அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ள முடிவை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் வசம் இருக்கிறது. அவர்கள் தான் அந்நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் அண்மையில், பெண்கள் உயர்கல்வி படிக்க தடை விதித்து இருந்தனர். இது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, புதியதாக, அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ளனர். […]
உலக மக்கள் தொகை இன்று(நவ-15) 800 கோடியை தொட்டு விட்டது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கணக்கிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கணக்கீட்டின் படி உலகத்தின் மொத்த மக்கள்தொகை இன்று நவ-15இல் 800 கோடியை தொட்டு விட்டது. இது மனித வளர்ச்சியின் ஒரு மைல்கல் என்று கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சமீபத்திய கணிப்பின்படி உலக மக்கள்தொகை 2030இல் 850 கோடியையும், 2050இல் 970 கோடியையும், 2100இல் 1040 கோடியையும் எட்டிவிடும் என்று தெரிவித்துள்ளது. வருடாந்திர உலக மக்கள்தொகை […]
சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மறைவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல். திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி (84), எல்கர் பரிஷத் வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் […]
ஐ.நாவின் ஈரான் மீதான 15 ஆண்டு கால ஆயுதத் தடையானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பு என சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டதாக அந்நாட்டின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தது உத்தரவிட்டது. ஐ.நாவின் இந்த தடையால் கடும் நெருக்கடிக்கு தள்ளபட்ட ஈரான், அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தினை கொடுத்தது. இதனால் அவ்வற்றின் மீதான் பொருளாதாரத் தடையை மட்டும் ஐநா விலக்கியது. ஆனால் […]
உலக அழகையும் தன்முடன் உள்ளவர்களையும் பார்க்க துடிக்கும் அந்த பார்வைகளின் ஏக்கத்தை ஒரு போதும் எழுத்துக்களால் சொல்லமுடியாது.சில மணி துளிகள் மின்சாரம் தடைபட்டாலே நம்மால் இருட்டில் இருக்க மாட்டோம் ஆனால் வாழ்நாள் முழுவதும் இருட்டில் வாழும் அந்த பார்வைகள்…அவற்றிற்கு ஆதரவும்,அன்பு, அனுசரனை இவைகளே அவர்களுக்கு தற்போது வெளிச்சமாக இருந்து வருகிறது. அத்தகையோர்க்காக ஜ.நா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்.,8 உலக பார்வைகள் தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு […]
தீவிரவாதம் குறித்த விவாதம் எப்போது நடைபெற்றறாலும் அதற்கு தான் பலியாகி விட்டதாக பாகிஸ்தான் நாடகமாடி வருவது வாடிக்கையாகி விட்டதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜ.நா மனித உரிமை கவுன்சிலில் தீவிரவாதம் குறித்த விவாதம் குறித்து வெளியிட்ட ஜ.நாவுக்கான இந்திய செயலர் விமார்ஷ் ஆர்யன்,ஐ.நாவில் கூறியதாவது: பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக சாடினார்.சர்வதேச நாடுகளின் கவனத்தை தவறாக திசை திருப்பும் திட்டத்துடனேயே பாகிஸ்தான் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று கூறிய அவர் சொந்த நாட்டில் […]
ஆப்கானிஸ்தானில் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக United Nations அறிக்கை கூறுகிறது. ஆஃப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6000 முதல் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளதாக United Nations அறிக்கை கூறுகிறது. ஐ.நா சபையின் ஆய்வில் உதவி மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு தனது 26ஆவது ஆய்வறிக்கையை சமீபத்தில் சமர்பித்தது. மேலும் ஆஃப்கானிஸ்தானில் அல் காய்தா இயக்கம் தாலிபான்கள் உதவியுடன் 12 மாகாணங்களில் இயங்கி வருவதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளை அழைத்து […]
ஜ.நா இறுதி செய்துள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் 75வது ஆண்டு விழாக்காக இறுதி செய்யப்பட்ட தீர்மானத்தின் வரைவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஐ.நா சபை எனப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக கடந்த மாதம் தேர்வாகிய இந்தியா வரும், 2021ம் ஆண்டு, ஜனவரியில் இருந்து,2 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இருக்கும். இந்நிலையில் தான் ஐ.நாவின், […]
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன். உலகம் முழுவதும் வறுமையே இருக்கக்கூடாது என்பதே எனது ஆசை என்று மதுரை சலூன்கடைக்காரர் மகள் நேத்ரா தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று கூறியுள்ளார். ஐ.நா.மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தது பற்றி மதுரை மாணவி நேத்ரா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது இதனை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் […]
ஐ.நா-வில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியாற்றி வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றதை அடுத்து, சென்னையை சேர்ந்த IAS அதிகாரி டி.எஸ்.திருமூர்த்தி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் 2016-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியில் இருந்து வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றார். அவர் ஐ.நாவில் பல்வேறு முக்கிய விவாதம் மற்றும் பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை பலமாக எடுத்துரைத்தார்.0 அதிலும் முக்கியாமாக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதை சேர்ந்த […]
கொரோனா அச்சத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் முடங்கி போய் உள்ளன. இதனால் நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு பரிமாற்றமும் தடைபட்டுள்ளது. இது குறித்து ஐநா அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிக்கையை ஐ.நா, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தலைவர் கியூ டோங்கியா, உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெஸ்ரோஸ் கெப்ரியாசிஸ்;, உலக வர்த்தக அமைப்பு இயக்குனர் ராபர்டோ அஸிவேடோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலக […]
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமர் மோடியின் உத்தரவின்படி வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டை விட்டு வெளிய வர கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் […]
ஐநா சபை உலகில் பிரபலம் வாய்ந்த பாகிஸ்தான் இளம்பெண்ணை தேர்வு செய்துள்ளது. மலாலா யூசுப்சாயின் கடுமையான உழைப்பு, சமூகத்தின் மீதான பற்று போன்ற கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐநா சபை உலகில் பிரபல வாய்ந்த நிகழ்வுகள், பிரபலம் வாய்ந்த நபர்களை தேர்தெடுத்து அறிவுப்பு வெளியிடும். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா […]
நடப்பு ஆண்டில் தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகம். புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் நீரின் மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் உயர்வு. 70 லட்சம் பேர் மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினால் நேரடியாக பாதிப்பு. உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகம். கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன் இது தான் விளைவிற்கு […]
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம்அவர்களது சொந்தவீடே. பெண்களை பொறுத்தவரையில், அக்காலம் தொட்டு இக்காலம் வரை பல பெண்கள் இன்னும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். கடந்த ஆண்டில் கொலை செய்யப்பட்ட பெண்களில் பகுதியளவு பெண்கள், தங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் அறிக்கை இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுவதற்கான சர்வதேச தினமான நவ.25-ம் தேதி, 2018 ஆம் ஆண்டு, பெண்கள் குறித்து ஐ.நா ஒரு முக்கியமான […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது பேசிய ட்ரம்ப், இந்தியாவை உதாரணமாக எடுத்துக்காட்டிப் பேசியுள்ளார். வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில், லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளனர். இதனால், மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவில், ஒரு சுதந்திரமான சமுதாயம் உள்ளது. அதனால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்த மக்கள் நடுத்தர மட்டத்துக்கு […]
ரோஹிங்கியா மக்கள் இனஅழிப்பு தொடர்பான ஐநாவின் குற்றச்சாட்டை மியான்மர் அரசு நிராகரித்துள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள ரக்கைன் மாகாணத்தில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கடந்த ஆண்டு மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 7 லட்சம் ரோஹிங்கிய இன மக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து ஐநா மனித உரிமை ஆணையம் நியமித்த குழுவினர் […]
மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை நாளை கொண்டாடி வருகின்றன. இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் நோக்கிலும் அனைத்து நிலை இலக்கிய அமைப்புகள் இவ்விழாவை நடத்த யுனெஸ்கோ கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச கவிதை இயக்கங்களுக்குபுதிய அங்கீகாரம் […]