ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வருவதும் அதனைப் பணம் கொடுத்து வாங்குவதும் நடந்து கொண்டு இருக்கும் இயல்பான விஷயமாக உள்ளது. ஏற்கனவே, அரசி எலிசபெத் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வகையைச் சேர்ந்த கார் 2.37 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அதைபோல், அவர் பயன்படுத்திய டிபேக் கடந்த மாதம் ஆன்லைனில் 9லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வரிசையில், […]
இங்கிலாந்து நாட்டில், நிறுவனம் ஒன்றில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணொருவர் மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் லண்டனில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றில் கேப்ரியலா ரோட்ரிக்ஸ் என்ற பெண், தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது அதில் கலந்துக் கொண்டவர்களுக்கு சாண்ட்விச் உணவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாண்ட்விட்ச்-ஐ சாப்பிட்டு விட்டு, […]
உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்ற 1000 மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் செயலிழக்கச் செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பாதிப்படைந்த தங்களது சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை சீரமைக்கும் முயற்சியில் உக்ரைன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதற்காக 1000க்கும் மேற்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் கண்ணி வெடிகளை செயளிக்கச்செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது.கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் முயற்சிகளை பாதுகாப்பாக […]
உலகத்தில் எந்தெந்த நாடுகளில் டாக்டர் பட்டம் (PhD graduates),அதாவது முனைவர் பெற்ற பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர் என்ற பட்டியலை இன்று உலக பொருளாதார மையம் (World Economic Forum) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் அமெரிக்கா 67,449 பட்டதாரிகளுடன் முதல் இடத்திலும்,ஜெர்மனி 28,147 பட்டதாரிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 25,020 பட்டதாரிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 24,300 பட்டதாரிகளுடன் நான்காவது இடத்திலும், ஜப்பான் 16,039 பட்டதாரிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பிரான்ஸ் 13,729 பட்டதாரிகளுடன் ஆறாவது இடத்திலும்,தென்கொரியா 12,931 பட்டதாரிகளுடன் […]