சென்னை : வெளிநாடு வேலைவாய்ப்பு என ஒரு சில தனியார் நிறுவனங்களில் அதிக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் இங்கு ஏராளம். அதனை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வெளிநாட்டு பணியில் சேர விரும்புவோர் விசா வந்த பிறகு அதற்கான சேவை கட்டணத்தை செலுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, வெல்டர், கட்டுருவாக்கம் ஆகிய பணிகளுக்கு […]
சென்னை : ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் கோல்டன் விசா (Golden Visa) என்றால் என்ன எதற்காக இந்த விசா கொடுக்கப்படுகிறது என்பதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா என்றால் என்ன? ஐக்கிய அரபு அமீரகம் பிரபலங்கள் பலருக்கும் UAE (Golden Visa) கோல்டன் விசா வழங்கி நாம் பார்த்திருக்கிறோம். பலருக்கும் இந்த விசா எதற்காக வழங்கப்படுகிறது என்று தெரியாமல் இருக்கும். முதலில் கோல்டன் விசா என்றால் என்ன என்பதை பார்க்கலாம். கோல்டன் விசா […]
சென்னை : ஐக்கிய அரபு அமீரகம் நடிகர் ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசு கோல்டன் விசாவை (Golden Visa) வழங்கியுள்ளது. மலையாள தொழிலதிபர் MA யூசுப் அலி முன்னிலையில் DTC தலைவர் முகமது கலீஃபா அல் முபாரக் கோல்டன் விசாவை ரஜினிகாந்திற்கு வழங்கினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து வீசா அங்கீகாரம் பெற்றதற்கு பெருமைப்படுவதாகவும் விசாவை பெற்ற பிறகு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விசா நடைமுறைகளை கையாண்ட […]
Dubai: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் தாயகமான துபாய், உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை உருவாக்குவது மூலம் அடுத்த உயரமான விஷயமாக பெருமை கொள்கிறது. ஆம், துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில், 26 கோடிப் பயணிகளை கையாளும் வகையில், ரூ. 2.9 லட்சம் கோடி செலவில் உருவாகிறது. 70 சதுர கி.மீ பரப்பளவில் 5 ஓடுபாதைகளுடன், 400 விமானங்கள் […]
செப்டம்பர் 22 முதல் இண்டிகோ நிறுவனம் மும்பை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல்-கைமா இடையே விமானங்களை இயக்கத் தொடங்குகிறது. தினசரி விமானம் மும்பையிலிருந்து இரவு 11 மணிக்கு (இந்திய உள்ளூர் நேரம்) புறப்பட்டு, அதிகாலை 12.35 மணிக்கு ( ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் நேரம்) ராஸ் அல்-கைமாவில் தரையிறங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. திரும்பும் விமானம் ராஸ் அல்-கைமாவில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் […]
ஓமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் ஒத்திவைப்பு. ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. துபாய் எக்ஸ்போவில் (கண்காட்சி) பங்கேற்பதற்காக ஜனவரி 6-ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்லவிருந்த நிலையில், தற்போது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கெளரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற நடிகர் பார்த்திபன் ட்வீட். ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019ம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. இந்த கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம் என்பதாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இந்த விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் குடிமகன் […]
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா, தற்போது நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு கிடைத்துள்ளது. அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இந்திய பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். மலையாள […]
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய […]
டி 20 உலகக் கோப்பை போட்டிகளானது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி 20 உலகக் கோப்பை போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று அறிவித்ததாக பிடிஐ தெரிவித்துள்ளது. மேலும்,இதுகுறித்து கங்குலி கூறுகையில்:”டி 20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற நாங்கள் ஐ.சி.சி.க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.அதன்படி,போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் […]
முதன்முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் நோயாளி ஒருவர். ஐக்கிய அரபு நாட்டில் அலி ஷம்சி என்பவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 60 வயதாகிறது. அதனால் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரது உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவத்தில் வைத்துள்ளனர். பின்னர், இவரது சிறுநீரகத்தில் இருக்கும் கட்டியை சிறப்பாக அகற்றி, […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சியுள்ள ஐபில் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது.இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் […]