டெல்லி : விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. சந்திரயான் 3-ஐ தொடர்ந்து, இஸ்ரோ நிலவில் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மேற்கொள்ள சந்திரயான்-4 விண்கலம் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின், பூமிக்கு மீண்டும் வருவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிரூபிப்பதற்காகவும் சந்திரயான்-4 என பெயரிடப்பட்ட இரண்டு முக்கிய விண்வெளிப் பயணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. நிலவில் இருந்து பாறைகள் மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு […]