புதுச்சேரி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என கூறியுள்ளார். பொய் பேசுபவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றால் அதை நாராயணசாமிக்கு தான் தரவேண்டும் என விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் ஊழலை வளர்க்கும் வேலையை மட்டுமே […]