குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதுகள் 152 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான 152 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த […]