மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு ஒப்புதல். மூக்கு வழியே (நாசி தடுப்பூசி) செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. புதிய வகை கொரோனா மீண்டும் பரவி […]
உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கப்பட்ட சிரப்கள் இந்தியாவில் விற்கப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். இந்தியாவில் மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி சிரப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆப்ரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு அந்நிறுவனத்தின் மருந்து காரணமானதால் பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவுறுத்தியிருந்தது. இந்த மருந்துகள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு […]
மார்ச் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் முதுநிலை தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு. மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS), 2022 ஆம் கல்வி ஆண்டில் MD, MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு (NEET PG EXAM 2022) வரும் மார்ச் 12 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. NBEMS இன் அதிகாரப்பூர்வ தளமான natboard.edu.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, […]
கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது என்றும் கூறியுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் […]
இந்தியாவில் ஒரே நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் முன்பைவிட அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 17,636,307ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் […]
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தடுப்பூசிக்கு ஒரு சில வாரங்களில் உரிமம் பெற்று விடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.அதனைப்போல இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசுசுகையில், கொரோனா […]
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 61,870 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த தொற்றால் நேற்று ஒரே நாளில் 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 7,494,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,14,031 பேர் உயிரிழந்துள்ளனர். 6,597,209 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 7,83,311 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.