இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்ல உள்ளார். அங்கு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் SBI வாங்கி கிளைகளை திறந்துவைக்கும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பின்னர், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட NAAM 200 […]
தமிழில் படித்ததால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிதியமைச்சர் பேச்சு. சென்னையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும். தமிழ்மொழியில் கல்வி கற்றால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெறுவோருக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம் எனவும் கூறினார்.