நீட் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவல்ல, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று மத்திய கல்வி அமைச்சர் பேட்டி. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு விரைவில் ஏற்றுக்கொள்ளும். தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் […]