வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். புறநகர் பகுதி மக்கள் இன்னும் புயல் பாதிப்பில் இருந்து மீளாமல் தவித்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் பாதிப்புகள், நிவாரண பணிகள் மேற்கொள்ள மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு 5060 கோடி ரூபாய் கேட்டிருந்தது. இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த […]