இந்தியாவுக்கு எதிராக பொய்களைப் பரப்பும்,சதி செய்யும் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலியான செய்திகளை பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் முடக்கப்பட்டதாகவும்,நாட்டிற்கு எதிராக “சதி செய்யும்” நபர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: “உளவுத்துறை அமைப்புகளுடன் […]
ரூ.76,000 கோடியில் செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். நாட்டில் செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தி சூழலை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கார்களுக்கான செமிகண்டக்டர் கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 6 ஆண்டுகளில் ரூ.76,000 கோடியில் செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்று பாசன திட்டங்களுக்கு ரூ.93,068 கோடியில் மாநில அரசுகளுக்கு ரூ.37,454 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் […]
மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க, ஆட்டோ துறைக்கான 26,000 கோடி ஒதுக்கீடு . இந்தியாவின் ஆட்டோ, ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்த மற்றும் ட்ரோன் துறைக்காக ரூ .26,058 கோடி ரூபாயை உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிஎல்ஐ திட்டம் இந்தியாவில் மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஊக்குவிக்கும்.இது 7.6 லட்சத்துக்கும் […]