மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை. நாட்டில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சமயத்தில் கொரோனா பரவல் தொடர்பான ஒரு பொதுநல வழக்கில் ஒமைக்ரான் பரவலால் சட்டப்பேரவை தேர்தல்களை தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. இதனையடுத்து, 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தள்ளிவைக்கப்படுமா என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. […]
நாடு முழுதும் பதிவாகும் கொரோனா வழக்குகளில் 68% கேரளாவை சேர்ந்தது என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தற்போதும் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், கேரள மாநிலத்தில் அதிக அளவில் தற்போது கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் தற்போது கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள், நாடு முழுவதும் […]