மக்கள் பயப்பட தேவையில்லை. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். – மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா. கொரோனாவின் தாக்கம் தற்போது அண்டை நாடான சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், […]
முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு. முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவித்துள்ளார். இடஒதுக்கீடு வழக்கில் சமீபத்தில் முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், தற்போது கலந்தாய்வு வரும் 12-ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, கடந்த 7-ஆம் தேதி முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் […]
இந்தியாவில் இதுவரை 90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தற்பொழுது நாட்டில் குறைந்து வரும் நிலையில், மூன்றாம் அலை வருவதை தவிர்க்கும் விதமாகவும், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை நாடு முழுவதும் 90 கோடி பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேரளா சென்றுள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் தற்போது பரவி வருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 1.76 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் அரசு திணறி வரும் நிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் கேரளா சென்றுள்ளார். கேரளாவில் உள்ள கொரோனாவின் தீவிரத்தை அறியவும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு […]