உத்தரகாண்ட் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தின்படி 74 உறவு முறைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை உருவாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று பொது சிவில் […]
உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் இன்று மிக முக்கிய நிகழ்வாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் உத்தரகாண்ட் சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யபட்டது. இதனால் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த சட்ட மசோதா மீது நேற்று முதல் இன்று வரை விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த சட்ட மசோதா பற்றி உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், இது ஒரு சாதாரண மசோதா அல்ல. இந்தியா […]