ஆகஸ்ட் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைவராக இந்தியா பொறுப்பேற்றுக்கொண்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைவராக முதல் முறையாக இன்று இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது.ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி, பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, மாதம் ஒரு நாடு இருக்கும்.அதன்படி,தற்போது இந்தியா பொறுப்பேற்றுள்ளது. இதுவரை பாதுகாப்பு கவுன்சிலில் இருந்தபோது இந்தியாவுக்கு பிரான்ஸ் அளித்த அனைத்து உதவிகளுக்கும் இந்தியாவின் ஐநா தூதர் டிஎஸ் திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். நெருங்கிய உறவு: மேலும்,ஆகஸ்ட் மாதத்திற்கான திட்டங்களை முன்னிலைப்படுத்தி, திருமூர்த்தி […]
கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது. அதன் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது. […]
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கூட்டம் நடைபெற்றது.இதில் ,பாகிஸ்தான் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை […]
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடும் படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், எந்த நாடும் இதுவரை பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்கவில்லை. கடந்த 5 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறிய காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில், அமெரிக்கா,சீனா நாடுகளிடம் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது.இரு நாடுகளும் […]
ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போருக்கு தீர்வு காண நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தற்போது கோரிக்கை வைத்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த தலிபான்களின் ஆட்சியை அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மொத்த நாட்டின் எல்லையில் மூன்றில் இரண்டு பங்கு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும் […]