டெல்லி:குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 2022-23 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா ராமன் இன்று தாக்கல் செய்துள்ளார்.அதன்படி,தனது உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில்,குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதே சமயம்,பெரு நிறுவனங்களுக்காக கூடுதல் வரி 12% லிருந்து 7% மாக குறைக்கப்படும் என்றும்,வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான […]
ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்ட போது, காற்றில் பறந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் குடை. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கு அவர், இளவரசர் சார்லஸின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் குடையை பிடித்திருந்தார். அப்போது, காற்று வேகமாக வீசியதால், அவரது குடை மேல் நோக்கி மடிந்தது. பின் அவர் அந்த […]
செய்தியாளர் சந்திப்பில் மழை தூரல் விழ தொடங்கியதால் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு பிரான்ஸ் அதிபர் குடை பிடித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்லோவாக்கியாவின் பிரதமர் இகார் மாடோவிக் அவர்கள் அரசு பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள அவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உடனான சந்திப்பிற்கு பின்பதாக குறித்து செய்தியாளர்களுக்கு பகிர்ந்துள்ளார். அப்பொழுது மழை தூரல் குறுக்கிட்டுள்ளது. எனவே அருகிலிருந்து பிரான்ஸ் நட்டு அதிபர் இம்மானுவேல் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்துள்ளார். உடனே அருகிலிருந்த உதவியாளர் […]
பொதுமக்கள் கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால், தனிமனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டு கொரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதன் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய சேவைக்கு வெளியில் செல்லும் போது தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசங்கள் அணிவதை பின்பற்றவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி […]
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 58 எஸ்டேட் உள்ளது. இந்த 58 எஸ்டேட்களுக்கும் வால்பாறையில் இருந்து அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் தொடக்கி அக்டோபர் மாதம் வரை மழை பெய்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் ராயன் எஸ்டேட் பகுதிக்கு சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் மேல் கூரையில் உள்ள ஓட்டையால் மழை நீர் நேரடியாக பேருந்துக்குள் நுழைகிறது. இதனால் பயணிகள் இருக்கையில் அமரமுடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் பேருந்தில் […]
நான் தடுத்து நிறுத்த முயற்சி செய்த போது காற்று அந்த குடையுடன் சேர்த்து என்னையும் மேலே தூக்கி சென்றது. சுமார் 2 அல்லது 3 மீட்டர் உயரம் வரை பறந்தேன். துருக்கி நாட்டில் ஒஸ்மானியே பகுதியில் காற்று பயங்கரமாக வீசியதால் பறக்க இருந்த நிழற்குடையை தடுத்து நிறுத்த முயன்ற சாதிக் கோகதள்ளி என்பவர் அந்த குடை உடன் சேர்ந்து பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சாதிக் கோகதள்ளி கூறுகையில், ஹோட்டல் வெளியில் […]