உக்ரைனில், ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக உக்ரைன் தகர்த்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவில் 23 ட்ரோன்கள் மூலம் தன்னிச்சையாக வெடிக்கும் விமானங்களை அனுப்பி தாக்கியுள்ளது. இதில் 18 ட்ரோன் விமானங்களை சுட்டுத்தள்ளியதாக உக்ரைன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் சில அடுக்குமாடிக் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பாக உக்ரைன் மீது ரஷ்யாவால் இதுவரை இல்லாத, ஒரேநாளில் 70 க்கும் மேற்பட்ட […]
உக்ரைனின் மீது ரஷ்யப்படைகள் மீண்டும் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யப்படைகள் கிட்டத்தட்ட 60 ஏவுகணைகளை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. மத்திய உக்ரைனில் ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனின் இரண்டு பெரிய நகரங்களான கிய்வ் மற்றும் கார்கிவ் ஆகியவற்றில் மின்சாரம் மற்றும் நீர் சேவைகள் தடைபட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், தங்குவதற்காக ஆழமான சுரங்கப்பாதை நிலையங்களை தேடி விரைந்தனர். […]
உக்ரைனில் மின்சாரம் இல்லாத பகுதிகளில், மக்களுக்காக பழைய கார் ரிம்களில் இருந்து அடுப்புகள் தயார் செய்யப்படுகின்றன. ரஷ்யா-உக்ரைன் போரானது நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைனின் மின் நிலையங்களை ரஷ்ய ஏவுகணைகள் குறிவைத்து அளித்தன. இதனால் உக்ரைனின் பெரும்பாலான பகுதியில் மின்சாரமானது தடைப்பட்டது. மின்சார தடையால் மக்கள் அனைவரும் இருளிலும் மற்றும் கடும் குளிரிலும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்பொழுது அவர்களுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் இருளில் தவிக்கும் மக்களுக்காக லிதுவேனியா நாட்டின் நிறுவனம் கார்களில் உள்ள பழைய ரிம்களிலிருந்து […]
உக்ரைனுக்கு கூடுதலாக 270 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதலாக வழங்கிய 270 மில்லியன் டாலர் ராணுவ உதவியில் நான்கு புதிய M142 உயர் மொபைலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புகள் மற்றும் 580 பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்கள் அடங்கும். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த “சக்திவாய்ந்த ஆயுதங்கள் நமது வீரர்களின் உயிரைக் காப்பாற்றும், விரைவுபடுத்தும் … […]
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ருங்கடலில் முக்கிய நகரமான ஒடேசாவின் துறைமுகத்தை தாக்க ரஷ்யா முயற்சிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிட்ஸ்யா விமான […]
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தாலும், உக்ரைன் பதிலடி கொடுத்துக் கொண்டு தான் உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக பல நாடுகள் தடை விதித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில், போயிங் நிறுவனம் மனிதாபிமான நிதியாக ரூ.15.23 […]