தெற்கு உக்ரைனில் அண்மையில் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரின் மீது ரஷ்யப் படைகள் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ரஷ்யா 24 மணி நேரத்தில் கெர்சனில் உள்ள பொதுமக்களின் இருப்பிடங்களை நோக்கி பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து 33 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ராணுவம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல். திங்கள்கிழமை காலை ரஷ்யா “காமிகேஸ்” ட்ரோன்கள் மூலம் கீவ் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய உயர் அதிகாரி வெளியிட்ட முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக் கூறுகையில்,”இது அவர்களுக்கு உதவும் என்று ரஷ்யர்கள் நினைக்கிறார்கள், ஆனால் இந்த நடவடிக்கைகள் விரக்தியை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார். “எங்களுக்கு கூடிய விரைவில் வான் பாதுகாப்பு […]
“உக்ரைனில் வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு உள்ள நிலைமையில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.